அமெரிக்காவில் உள்ள Oregon பகுதியை சேர்ந்தவர் Zave Fors. 24 வயதான இவருக்கு இவரது பயாலஜிக்கல் தந்தையால் உருவாகியிருக்கும் வினோத சிக்கல் அண்மையில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் வரும் மெயின் கதையை ஒத்திருக்கிறது. சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ்.
இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் தந்தையாக வருபவர் பிரபல நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ். இந்த திரைப்படத்தில் சந்தானம் காதலித்து திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் இறுதியில் ஏதோ ஒரு வகையில் சந்தானத்தின் தந்தையின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவராக இருப்பதாக கூறி சந்தானத்தின் தந்தை திருமணத்தை நிறுத்திவிடுவார். ஏனென்றால் ஹீரோயின் சந்தானத்தின் தங்கை முறையாகிவிடும் என்பதுதான்.
ஆனாலும் கதையின் இறுதியில் ஹீரோயின் ஹீரோயினது அம்மாவின் சகோதரருக்கு பிறந்த குழந்தை என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும், அந்த விவகாரம் ஹீரோயினின் அம்மாவுக்கே தெரியாது. படத்தின்படி வக்கீலாக இருக்கும் சந்தானத்தின் தந்தை செல்லுமிடமெல்லாம் கோர்ட்டில் பணிபுரியும் பெண்களை மணம் புரிவது போல் நகைச்சுவையாக காட்டி இருப்பார்கள். அப்படித்தான் முதல் மனைவி இருக்கும்போதே அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு 2 குடும்பங்களையும் மெயிண்டெயின் செய்துகொண்டு வந்திருப்பார். ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்வார்.
இதனால் படத்தின் இறுதிக்காட்சியில் தன்னிடம் வந்து புரபோஸ் செய்யும் ஒரு பெண்ணை கூட அப்பாவின் பெயர் என்ன? அவர் புகைப்படத்தை காட்ட முடியுமா? என்ற சந்தேகமாய் கேட்பார் சந்தானம். இப்படித்தான் அமெரிக்காவில் தமது தந்தை பற்றி இணையதளத்தில் Zave Fors கண்டறிந்த உண்மை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி Zave Fors-ன் பயாலஜிக்கல் தந்தை கடந்த பத்து வருடங்களாக சுமார் 500 முறை உயிரணுக்களை விற்றிருப்பதாகவும், அதனால் அவருக்கு தவிர சுமார் 50 பிள்ளைகள் இருக்கலாம் என்றும் அவருக்கு தெரியவந்தது. அப்போதுதான் தானும் ஒரு உயிரணுக்கு பிறந்த குழந்தைதான் என்பதை தமது உடன்பிறவா சகோதரர் மூலம் Zave அறிந்துகொண்டார்.
இதனால் பிரபல டேட்டிங் ஆப்பான டெண்டர் மூலம் அவருக்கு அறிமுகமாகும் நபர்கள் அவருக்கு சகோதரியாக இருந்து விடுவார்களோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இதனை அடுத்து தனது தந்தையை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்கிய Zave Fors தனது உடன் பிறந்தவர்கள் 8 பேரை கண்டுபிடித்திருக்கிறார். ஆண்கள், பெண்கள் என இருபாலருமான அந்த 8 பேரும் தற்போது தங்களுடைய உண்மையான பயாலஜிக்கல் தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.
இது எல்லாத்தையும் விட சுவாரசியமான செய்தி என்னவென்றால், பள்ளிப் பருவத்தில் Zave Forsக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்த ஒருவர் தனது தந்தையின் உயிரணுவுக்கும் பிறந்த ஒருவர் தான், அதாவது தமது சகோதரர் தான் என்பது அவருக்கு தற்போது தெரியவந்துள்ளது. இன்னும் எத்தனை பேரை தான் இப்படி இந்த டேட்டிங் ஆப் மூலமாக எனது சகோதரர்களாக கண்டறிய வேண்டிய அவல சூழ்நிலை ஏற்படவிருக்கிறதோ என்று Zave Fors பிரபல ஆன்லைன் பத்திரிக்கையான மிரர் பத்திரிகையில் புலம்பியிருக்கிறார்.
ALSO READ: PARIS JAYARAJ (TAMIL) MOVIE REVIEW - பாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்