நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்த நடிகை அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வரும் இவர, அண்மையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் இப்பட விழாக்களில் கலந்துகொண்டார்.
Also Read | Vikraman : “இப்படியே இருங்க விக்கூ.. பொண்ணுங்க சைட் அடிப்பாங்க”.. விக்ரமன் நியூ லுக் பற்றி மைனா..
அவ்வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் இப்படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் இணைந்து நடிகை அபர்ணா பாலமுரளி பங்கேற்றார். இந்த விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரசிகர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்க, அவர் அதை ஏற்றார். பின்னர் மகிழ்ச்சியுடன் அவர் அபர்ணாவுடன் கைகுலுக்கி கொண்டார்.
அபர்ணாவும் அந்த இளைஞருக்காக எழுந்து மரியாதையாக கைகொடுக்க, அப்போது அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க முயற்சிக்க, அப்போது சுதாரித்து கொண்ட அபர்ணா, சிரித்தபடியே, அம்மாணவரது கையிலிருந்து நழுவினார். அந்த சமயத்தில் அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் உள்ளிட்டோர் அதிருப்தி ஆகியதுடன், அந்த இளைஞரை கட்டுப்படுத்தினர்.
அதன் பின்னர் மைக்கில் பேசிய அந்த இளைஞர், “நான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை . நான் நடிகை அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ” என குறிப்பிட்டு மேடையிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், அனைவர் முன்னிலையிலும் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய அதே சமயம், கோபப்படாமல், சிரித்தபடி மெச்சூரிட்டியுடன் இந்த விசயத்தை கையாண்டுள்ளதாகவும் நடிகை அபர்ணா பாலமுரளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்த வீடியோவை தம் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை மஞ்சிமா மோகன், அப்பதிவில் தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான தமது அந்த கருத்தில், “நம்ப முடியாத வகையில், அருவெறுக்கத்தக்க வகையில் இச்செயல் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.