கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
Also Read | மாணவர்களுடன் கபடி & கிரிக்கெட் ஆடி மாஸ் காட்டும் அமைச்சர் ரோஜா.. TRENDING
கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நேற்று சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி உள்ளன. நடிகர் கௌதம் கார்த்திக்கின் தந்தை கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் மஞ்சிமா மோகன் குடும்பத்தினர் மணமக்களை ஒரே மேடையில் தோன்றி வாழ்த்திய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. "அழகான குடும்பம்.. லவ் யூ கௌதம் & மஞ்சிமா" என தலைப்பிட்டு மருத்துவர் கவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதனை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறு பதிவு செய்துள்ளார்.
Also Read | "ஹாய்.. BIGG BOSS -ல இருந்து வந்தாச்சு" .. ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட வைரல் வீடியோ!