www.garudavega.com

இயக்குனர் மணிரத்னத்திற்கு புனே MIT பல்கலைக்கழகம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்! முழு விபரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம் (MIT World Peace University), திரைத்துறை பங்களிப்பிற்காக  இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு, பாரத் அஷ்மிதா தேசிய விருதினை  (Bharat Asmita National Awards) வழங்குகிறது !

 

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

சூர்யாவின் ET படத்துடன் மோதும் பிரபாஸ்! வெளியான ராதே ஷியாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

ஒவ்வொரு வருடமும்,  புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம், (MIT World Peace University),  இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 18 வருடங்களாக நிகழந்து வரும் இந்த விருது விழா சார்பில்,  இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு விருது வழங்குகிறது. இவ்விருது விழா 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

18வது ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு  பெருமை சேர்த்த நபர்களை கவுரவித்து வருகிறது,  இந்த விருது சாதித்த ஆளுமைகளை கவுரவிப்பதற்காகவும்,  இளைஞர்களை ஊக்குவித்து, ஆளுமைகளின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லவும்,  இந்த விருது  ராகுல் V.காரத் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விருது, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

இந்த ஆண்டு விருது பெற்றவர்களை பாரத் அஸ்மிதா விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநாத் மஷேல்கர் - உலகப் புகழ்பெற்ற மூத்த விஞ்ஞானி, டாக்டர் விஜய் பட்கர் - உலகப் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் விஸ்வநாத் D காரட் - UNSECO தலைவர் ஹோல்டர் ஆகியோர் தலைமையில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இந்த வருடம் பாரத் அஷ்மிதா தேசிய விருதினை

நிர்வாகத்தில் சிறந்த ஆசிரியர்:  பேராசிரியர் காவில் ராமச்சந்திரன்

வெகுஜன ஊடகம்/என்ஜிஓவின் சிறந்த பயன்பாடு: ஷெரீன் பான்

சிறந்த நடிப்பை பயன்படுத்தியவர் / திரை இயக்கம்: மணிரத்னம்

பாடல்/இசை/பாடலின் சிறந்த பயன்பாடு: சங்கர் மகாதேவன்

கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு: டாக்டர் கிருஷ்ணா எல்லா

பாராளுமன்ற நடைமுறைகளின் சிறந்த இளம் பிரதிநிதி: கௌரவ் கோகோய்

ஆகியோருக்கு அவரவர் துறையின் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது விழா பொது ஊரடங்கு காரணமாக, வரும் 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தப்படவுள்ளது.

பிகினியில் மாளவிகா மோகனன்... ட்விட்டரில் ஜொல்லு விட்ட பிரேம்ஜி! வைரலாகும் ட்வீட்

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

 

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam Shankar Mahadevan Receive Bharat Asmita National Awards

People looking for online information on Mani Rathnam, Mani Ratnam, MIT, National Award, Ponniyin Selvan, Shankar Mahadevan will find this news story useful.