இன்று காலை மணிரத்னம் சத்குருவுடன் சேர்ந்து கோல்ப் ஆடியதாக சுஹாசினி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
இயக்குநர் மணிரத்னம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது .மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது வெறும் வதந்தியே! அவர் வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்று நமக்கு தகவல் கிடைத்தது
இந்நிலையில் மணிரத்னம் இன்று காலை சத்குருவுடன் சேர்ந்து கோல்ப் ஆடியதாக ட்வீட் செய்துள்ளார் சுஹாசினி.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் வேலையில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அந்த ஸ்க்ரிப்ட் தொடர்பான பணிகளில் தான் அவர் பிசியாக உள்ளாராம். பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் போன்ற ஒரு அருமையான நாவலை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது மணிரத்னத்திற்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தனது கனவு படத்தை எடுத்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
— Suhasini Maniratnam (@hasinimani) June 19, 2019