தொகுப்பாளரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்டார்களின் ஒருவரான மணிமேகலை இன்ஸ்டாகிராமில் தனக்கு நடந்த விபத்து ஒன்றை பற்றி பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி ஸ்டார்:
தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக எண்டர்டெயின் செய்து வந்தார். அவரின் குறும்புகளும், நிகழ்ச்சியின் போது அவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த சீசனின் ஸ்டார் போட்டியாளர்களில் ஒருவரானார் மணிமேகலை.
மணிமேகலையின் இன்ஸ்டா பதிவு:
இன்று உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிமேகலை இன்று தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரியில் ‘இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் எனக்கு மார்ச் 8 என்பது சுடுதண்ணி சம்பவத்தின் ஒரு வருடம். இன்னைக்கு முழுக்க சமையலறைப் பக்கம் போகக் கூடாது’ என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர்.
அது என்ன சுடுதண்ணி சம்பவம்:
கடந்த ஆண்டு இதே நாளில்தான் மணிமேகலை தன்னுடைய வீட்டில் குளிப்பதற்காக சுடுதண்ணி வைக்கும் போது அது தவறி தன்னுடைய காலில் பட்டு காயமானதாக தெரிவித்திருந்தார். அது சம்மந்தமாக அப்போது அவர் பகிர்ந்திருந்த புகைப்படமும் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு முடிந்துள்ளதைதான் மணிமேகலை இன்று நினைவு படுத்தி தன்னுடைய ஸ்டோரியில் வைத்துள்ளார்.
கார்விபத்தில் ஜஸ்ட் மிஸ் :
இதுபோலவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மணிமேகலை இன்னொரு கார்விபத்தில் சிக்கினார். அது சம்மந்தமாக அவர் வெளியிட்ட வீடியோவில் “ஒரு விபத்தில் ஜஸ்ட் மிஸ்-ல உயிர் பிழைத்து நான் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம், வெளியே சென்று கொஞ்சமாவது என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்து வெளியே சென்றால், நீ என்ன ரிலாக்ஸ் பண்றது என்பது போல் ஒரு சம்பவம் நடக்கும்ல? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது. ஆம், நான் பாட்டுக்கு மெதுவாகதான் காரில் சென்று கொண்டிருந்தேன். பார்த்தால் ஒரு லாரி, டோல் பூத் அருகே, லைட்டாக வந்து கார் மீது விட்டுவிட்டார்கள். காரின் முன்பக்கம் கொஞ்சம் காலிதான். ஆனால் ஷோரூமில் சென்று, காரை விட்டால் பர்ஸ் முழுவதையும் காலி செய்து விடுவார்கள். அந்த அளவுக்கான சேதாரம்தான் அது’ என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு மட்டும் அவர் இதுபோல அவர் இரண்டு விபத்துகளில் இருந்து லேசான காயத்தோடு தப்பியிருக்கிறார்.