குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த மணிமேகலை…
தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக எண்டர்டெயின் செய்து வந்தார். அவரின் குறும்புகளும், நிகழ்ச்சியின் போது அவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த சீசனின் ஸ்டார் போட்டியாளர்களில் ஒருவரானார் மணிமேகலை.

பைக் தொலைந்த சோகம்…
சமீபத்தில் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் தன்னுடைய கணவரின் விலையுயர்ந்த கே டி எம் பைக் காணாமல் போயுள்ளதாகக் கூறியிருந்தார். அதில் “அசோக் நகர் அருகே உள்ள எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போயுள்ளது. கல்யாணத்துக்குப் பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆசையா வாங்குனா ஃபர்ஸ்ட் பைக். மனசுக்கு கஷ்டமா இருக்கு. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ !” என சோகத்தோடு பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் வண்டியைப் பற்றிய விவரங்களை வெளியிட்ட அவர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாமே நல்லபடியாக முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். மேலும் திருடர்கள் வந்துபோகும் சிசிடிவி புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். ஆனாலும் இதுவரை பைக் கிடைக்கவில்லை.

கணவருக்காக புது பைக்…
இந்நிலையில் மணிமேகலை தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக புதிய BMW பைக் ஒன்றை புக் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை அவர் தன் கணவரிடம் சொல்ல அவர் முதலில் நம்பவே இல்லை. மணிமேகலை எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பாததால், ஒரு கட்டத்தில் மணிமேகலை “உன் காலில் வேணாலும் விழுறேன். நம்புப்பா” என சொல்கிறார். பின்னர் பைக் புக் பண்ணியவர்களிடம் போன் பண்ணி சொன்னதும்தான் உசைன் அதை நம்பினார். பின்னர் மணிமேகலைக் கொடுத்த சர்ப்ரைஸால் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் அவரைக் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இது சம்மந்தமான வீடியோவை இணையத்தில் மணிமேகலை பகிர அது வைரலாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க் https://behindwoods.com/bgm8.