விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பரபரப்பான கட்டங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.
போட்டியாளர்கள் மாறி மாறி கலகலப்பாக இருக்கும் அதே வேளையில், டாஸ்க் என வந்து விட்டால் அங்கே பல சண்டைகள் உள்ளிட்ட விஷயங்கள் தான் அரங்கேறுகிறது.
பொம்மை டாஸ்க் பெயரில் போட்டியாளர்கள் இடையே சண்டை நடந்திருந்தது, பெரிய அளவில் அந்த வாரம் விவாத பொருளாக மாறி இருந்தது. மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட, கடைசியில் கமல்ஹாசன் வந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருந்தார்.
இதனிடையே, தற்போது ஃபேக்டரி டாஸ்க் நடுவே கூட பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும் போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.
இதில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பொருட்களை கன்வேயரில் இருந்து எடுக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டையும் ஏற்பட்டு மாறி மாறி முட்டி மோதிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோரும் வார்த்தை போரில் ஈடுபடுகின்றனர். பெர்சனலாக தாக்கி பேசுவதாக விக்ரமன் அமுதவாணனை குறிப்பிட, மறுபக்கம் விக்ரமன் பொய் பேசுவதாகவும் அமுதவாணன் தெரிவிக்கிறார். இதுவும் நீண்டு கொண்டே போக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல களேபரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
அதே போல, எதிர் அணியில் உள்ள போட்டியாளர்கள் விதிகளை மீறி செயல்படுவதையும் பிக்பாஸிடமே நேரடியாக புகார் கூறுகிறார் தனலட்சுமி. இப்படி டாஸ்க் என்று வந்தாலே பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக ஏதாவது பிரச்சனைகள் நேர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனிடையே, மணிகண்டன் மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கு இடையேயும் சண்டை வெடித்துள்ளது. இதில், அமுதவாணன், மணிகண்டன் ராஜேஷ் தன்னை அடித்து டாஸ்க் ஆடியதாக குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு மணிகண்டனோ, ‘அடிச்சா தைரியமா சொல்லுவேன் அடிச்சேன்னு. நீங்கள் நன்றாக ஃப்ரேம் பண்ணுகிறீர்கள்’ என்கிறார். தொடர்ந்து பேசும் அமுதவாணன், "அப்படி எல்லாம் சொல்லாத மணி, தப்பு அது எல்லாம்" என கூறியதும் "நீங்க என்ன பத்தி சொன்னதும் தப்புண்ணே" என்கிறார் மணிகண்டன்.
மேலும் அமுதவாணன் இந்த விஷயத்தில் மேலும் டென்ஷனாகி, ‘நான் ஒன்னும் காமெடியாக பேசுவதால் காமெடியன் இல்லை.. நான் ஒன்னும் மொக்கை இல்லை’ என டாஸ்க் என வந்துவிட்டால் தானும் அனைவரையும் போல பலமிக்கவர் தான் என்பதை கூறுகிறார்.
இதனிடையே, மணிகண்டனுடன் நடந்த சண்டை காரணமாக அமுதவாணன் கலங்குவதாகவும் தெரிகிறது. இதனை கண்டதும் நேராக அமுதவாணன் அருகே மணிகண்டன் செல்ல, "ஃபைட்ல வந்து அடிச்சு விளையாடணும்னா நான் வந்து அடிச்சு விளையாடுவேன், எனக்கு அது பிரச்சனை கிடையாது. ஆனா விட்டுட்டு, அதுக்கப்புறம் வந்து அடிச்சா நான் சொல்ல போறேன்னு சொன்னா அது என்ன மணி. அது பயங்கர கெத்து காட்டுற மாதிரி இருக்குல்ல" என அமுதவாணன் கூறுகிறார். இறுதியில், அமுதவாணனை சமாதானம் செய்வதுடன் நான் தான் தப்பு செய்தேன் என்பதையும் மணிகண்டன் ஒப்புக் கொள்கிறார்.