www.garudavega.com

பிக்பாஸ் வீட்டில் TREND ஆக தொடங்கிய பூமர் அங்கிள்.. தனலட்சுமி கொடுத்த அடடே விளக்கம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Manikanta Dhanalakshmi about boomer uncle meaning in bigg boss

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர். தற்போது கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் ஆசிரியர்களாகவும், அமுதவாணன் பிரின்சிபல் ஆகவும் வருகிறார். மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டில் வருகின்றனர்.

Manikanta Dhanalakshmi about boomer uncle meaning in bigg boss

தற்போது நடந்த பள்ளிக்கூட டாஸ்க்கில் தனாவை காதலிப்பதாக அவர் பின்னால் அசிம் சுற்றித் திறந்தது அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மாணவர்களாக இருந்த அனைவரும் ஒவ்வொரு கான்செப்ட் எடுத்து ஓவியங்கள் வரைந்து சமர்பித்திருந்தனர். இதில், ஷிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இப்படி பல விஷயங்கள், பள்ளிக்கூட டாஸ்க் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் சிறப்பாக தங்கள் பங்கை ஆற்றி வருவதாகவும் பிக்பாஸ் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில், கதிரவன், அமுதவாணன் உள்ளிட்டோர் வகுப்புகள் எடுக்கும் போது, மாணவர்களாக இருக்கும் அசிம், மணிகண்டா உள்ளிட்டோரை மற்ற மாணவ மாணவிகள் பூமர் அங்கிள் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தனர்.

Manikanta Dhanalakshmi about boomer uncle meaning in bigg boss

வயதான நபர் போல ஒருவர் அறிவுரை வழங்கும் சமயத்தில் அவரை பூமர் என குறிப்பிடுவதை நாம் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனித்திருப்போம். தற்போது பிக்பாஸ் வீட்டிலும் பூமர் என்ற வார்த்தை பயன்டுத்தப்பட்டு வருகிறது.

இது பற்றி, மணிகண்டா, கதிரவன், மைனா உள்ளிட்டோர் இருக்கும் போது பேசும் தனலட்சுமி, "பூமர் அங்கிள்னா என்னனு தெரியுமா?. பூமர்னா அதரப்பழசு. அங்கிள்னா இந்த வீட்டுக்குள்ளே இரு, ஆறு மணிக்கு மேல வெளியே போகாத அந்த மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்கல்ல அவங்க தான் பூமர் அங்கிள்" என தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, அசிமை பூமர் அங்கிள் என குறிப்பிட்டு தனா மற்றும் மணிகண்டா ஆகியோர் சிரிக்கவும் செய்கின்றனர்.

இதன் பின்னர், ஆசிரியர்களாக இருக்கும் மைனா நந்தினி மற்றும் கதிரவன் ஆகியோர், ஆசிரியர் இருக்கும் போது அவருக்கு தெரியாமல் வேடிக்கையான விஷயங்களை செய்தால் ரசனையாக இருக்கும் என்றும், அவருக்கு தெரியும் படி செய்தால் அது பெரிதாக இருக்காது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta Dhanalakshmi about boomer uncle meaning in bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Dhanalakshmi, Manikanta will find this news story useful.