'காதல்' கணவர் 'மரணம்'! சம்பிரதாயங்களை உடைத்து.. பிரேதத்தை சுமந்த 'நடிகை'! உருக்கமான நிகழ்வு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை மந்த்ரா பேடி. 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார்.

mandira bedi did last rites of Raj Kaushal breaks gender norms

இப்படி நடிகை, மாடல் என பன்முகம் கொண்ட மந்த்ரா பேடி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில் திடீரென ஒரு பெரிய சோகம் அவரை ஆட்கொண்டுள்ளது.

ஆம், அவரது கணவரும், பிரபல தயாரிப்பாளரும் மற்றும் இயக்குநருமான ராஜ் கௌசல் தற்போது மரணம் அடைந்திருக்கிறார். இந்த மரணச்செய்தி பாலிவுட் திரை உலகத்தை உலுக்கியுள்ளது. மேலும் தன்னுடைய காதல் கணவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மந்த்ரா பேடி, தம் உறவினர்களுடன் இணைந்து கணவரின் பிரேதத்தை சுமந்து, இறுதி சடங்குகளை, தானே முன்னின்று செய்திருக்கிறார்.

பொதுவாக இறுதி சடங்கில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பங்கேற்பார்கள். அப்படித்தான் இந்திய சமூகத்தில் சடங்குகள் உள்ளன. இந்த சூழலில் இந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் புறந்தள்ளி, காதல் கணவருக்காக மந்த்ரா பேடி, தானே முன்னின்று பிரேதத்தின் அருகில் இருந்து எல்லா சடங்குகளையும் செய்து முடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாகி காண்போரின் நெஞ்சத்தை உருக்கி வருகின்றன. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ் கௌசல் மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இதேபோல் பாடகி ஸ்ரேயா கோஷல் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி நடிகை குஷ்பு குறிப்பிடும்போது, “வாழ்க்கை ஒரு யூகிக்க முடியாதது!” என்று குறிப்பிட்டு, ராஜ் கௌசலை இழந்து வாடும் மந்த்ரா பேடி மற்றும் அவருடைய குழந்தைகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

நடிகை மந்த்ரா பேடி, தமிழில் சிம்பு நடித்த 'மன்மதன்' திரைப்படத்தில் முக்கியமான உளவியல் மருத்துவராக தோன்றி இருப்பார். இந்த நிலையில்தான் இவருடைய கணவர் உயிரிழந்த விவகாரம் இந்திய திரையுலகில் சோகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ: தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!

'காதல்' கணவர் 'மரணம்'! சம்பிரதாயங்களை உடைத்து.. பிரேதத்தை சுமந்த 'நடிகை'! உருக்கமான நிகழ்வு! வீடியோ

மற்ற செய்திகள்

Mandira bedi did last rites of Raj Kaushal breaks gender norms

People looking for online information on Mandira bedi, RajKaushal will find this news story useful.