மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி மற்றும் பார்வதி திருவொத் ஆகியோர் 'புழு' படத்தில் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பூஜை கேரள புத்தாண்டான ஸிங்கம் மாதம் முதல் நாளில் (17.08.2021) எர்ணாகுளம் சாய்ஸ் பள்ளியில் நடைபெற்றது. இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு எர்ணாகுளம் மற்றும் குட்டிக்கானம் பகுதிகளில் நடந்தது.
புதுமுக இயக்குனர் ரத்தின ஷர்ஷாத் "புழு" படத்தை இயக்கியுள்ளார். முதல் முறையாக மம்மூட்டி ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடித்துள்ளார். ஸின் - ஸில் செல்லுலாய்ட் பேனரில் எஸ். ஜார்ஜ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தை துல்கர் சல்மானின் வே ஃபெரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
வைரஸ் படத்துக்குப் பிறகு, ஷராஃப் மற்றும் சுஹாஸ் ஹர்ஷத்துடன் இணைந்து படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளனர். மம்மூட்டி மற்றும் பார்வதி ஆகியோருடன், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, இந்திரன் மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே-13 அன்று நேரடியாக சோனி லிவ் ஒடிடியில் ஒளிபரப்பாக உள்ளது.
கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே பேரன்பு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார். மனு ஜெகத், (பாகுபலி மற்றும் மின்னல் முரளி போன்ற படங்களின் கலை இயக்குனர்) "புழு" படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். எடிட்டராக தீபு ஜோசப்பும், இசையமைப்பாளராக ஜாக் பிஜோய்யும் பணியாற்றினர்.
நண்பகல் நேரத்து மயக்கம்' மற்றும் 'ரோர்சாச்' ஆகிய இரண்டும் மம்மூட்டியின் வரவிருக்கும் படங்கள் ஆகும். சுவாரஸ்யமாக, மம்மூட்டியின் புதிதாக தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனமான 'மம்மூட்டி கம்பெனி' இரண்டு படங்களையும் தயாரிக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/