VTK M Logo Top
www.garudavega.com

VTK படத்தில் ஹிட்டடித்த மல்லீப்பூ பாடல்.. இப்படி தான் உருவாச்சு! தாமரை பகிர்ந்த சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் தாமரை பதிவிட்டுள்ளார்.

Mallipoo song lyrics Vendhu Thanindhathu Kaadu movie

வெந்து தணிந்தது காடு படம் நேற்று முன்தினம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 64 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி ஏரியாவில் 43 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 63 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 78 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 41 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 51 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் & தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

Mallipoo song lyrics Vendhu Thanindhathu Kaadu movie

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார். மேலும்  பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "17.9.22. மல்லீப்பூ பாடல். 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல்  பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி 😍.

  இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது.  இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று ! 😊.

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! 😊. கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது ! 😊.

  

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ?? 😊. இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.

முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! 😊. விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன் 😊

படம் :  வெந்து தணிந்தது காடு

இயக்கம்  :   கௌதம் வாசுதேவ் மேனன்

இசை :   ஏ. ஆர். இரகுமான்

பாடல் வரிகள்  : தாமரை

பாடகி  :   மதுஸ்ரீ

நடிப்பு   : சிலம்பரசன் & குழு

காட்சி  :   பிரிவுழல்தல், தொலைதூர உறவு

தயாரிப்பு  :  வேல்ஸ் திரைநிறுவனம்

பாடல் வரிகள் :

பல்லவி

ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு

வாடுதே ...

அந்த வெள்ளி நிலா

வந்து வந்து தேடுதே ...

மச்சான் எப்போ

வரப் போறே ?

மச்சான் எப்போ

வரப் போறே ?

பத்து தலைப் பாம்பா வந்து

முத்தம் தரப் போறே ?

நான் ஒத்தையிலே தத்தளிச்சேன்...

தினம் சொப்பனத்தில் மட்டும்தான்

உன்னை நான் சந்திச்சேன்...

ஏ... எப்போ வரப் போறே..?

மச்சான் எப்போ வரப் போறே ?

பத்தமடைப் பாயில் வந்து

சொக்கி விழப் போறே ?

சரணம் 1.

வாசலைப் பார்க்கிறேன்

கோலத்தைக் காணோம் !

வாளியை சேந்துறேன்

தண்ணியைக் காணோம் !

சோலி தேடிப் போனே

காணாத தூரம்....

கோட்டிக்காரி நெஞ்சில்

தாளாத பாரம்...

காத்திருந்து காத்திருந்து

கண்ணு பூத்திடும் !

ஈரமாகும் கண்ணோரம்

கப்பல் ஆடும் ..!

சரணம் 2

தூரமாப் போனது

துக்கமா மாறும் ...

பக்கமா வாழ்வதே

போதுன்னு தோணும் !

ஊரடங்கும் நேரம்

ஓர் ஆசை நேரும் !

கோழி கூவும் போதும்

தூங்காம வேகும் !

அங்கு நீயும் இங்கு நானும்

என்ன வாழ்க்கையோ..!

போதும் போதும்

சொல்லாமல் வந்து சேரும் !

கடைசிப் பல்லவி.

ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே !

அந்த வெள்ளி நிலா

வந்து வந்து தேடுதே !

மச்சான் எப்போ வரப் போறே ?

மச்சான் எப்போ வரப் போறே?

உத்தரத்தப் பார்த்தே நானும்

மக்கிவிடப் போறேன்..!

அட எத்தனை நாள்

ஏக்கம் இது ...

பெரும் மூச்சுல

துணிக்கொடி ஆடுது

துணி காயுதே !

கள்ளக்காதல் போல

நான் மெல்லப் பேச நேரும் !

சத்தம் கித்தம் கேட்டால்

பொய்யாகத்

தூங்க வேணும் !

மச்சான் எப்போ வரப் போறே ?

மச்சான் எப்போ வரப் போறே ?

சொல்லிக்காம வந்து என்னை

சொக்க விடப்போறே ???

பி.கு :   சேந்துகிறேன் என்றால் கிணற்றிலிருந்து நீர் இறைப்பது ( Drawing water from a well ). கிராமங்களில் இயல்பாகப் புழக்கத்தில் இருக்கும் சொல்தான். பேச்சு வழக்கில் இங்கே 'சேந்துறேன்' என்று பாட வேண்டியது. " என தாமரை பதிவிட்டுள்ளார் ‌

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mallipoo song lyrics Vendhu Thanindhathu Kaadu movie

People looking for online information on ARR, GVM, Mallipoo, Mallipoo Song Lyrics, Str, VTK will find this news story useful.