நான் அவன் இல்லை படம் மூலம் பிரபலமான நாயகன் ஜீவன் நடிப்பில், அவருடன் இணைந்து ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கும் பாம்பாட்டம் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் இந்த படத்தில் தான் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இளவரசி நாகமதி’ கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
#Pambattam - First schedule wrapped and @mallikasherawat joining hands for second schedule.
Directed by @vcvadivudaiyan#Jeevan @iamyashikaanand @Senrittika @AmrishRocks1 @mounamravi @Pro_Bhuvan @CtcMediaboy pic.twitter.com/pEp8pnnz9G
— v.c.vadivudaiyan Film Director (@vcvadivudaiyan) February 23, 2021
இவர்தான் சன்னி லியோனை வைத்து வீரம்மா தேவி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாம்பாட்டம் படத்தின் கதை 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை என்றும், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளதால் குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் மல்லிகா ஷெராவத்தின் பகுதியில் நடிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.