மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
Also Read | இதுவல்லவோ சம்பவம்.. LEO பட Shooting-ல் இணையும் பிரபல இயக்குநர் நடிகர்,..
பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.
முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா அளித்துள்ளார். இதில், பகாசூரன் திரைப்படம் குறித்து நிறைய கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் மலேசியாவில் இருந்து ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் பேசும் அவர், “மோகன்.ஜி படம் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இது மிகப்பெரிய விழிப்புணர்வாக இருக்கிறது. அனைவரும் கட்டாயம் இந்த படத்தை போய் பார்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். இந்த பிரச்சினை தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கிறது. இயக்குனர் மோகன்.ஜி ஒவ்வொரு படத்திலும் இது போன்ற பிரச்சனைகளையே முன்வைத்து திரைப்படமாக எடுக்கிறார். படம் சூப்பராக இருக்கிறது. செம்மையாக இருக்கிறது. நான் மலேசியாவில் இருக்கிறேன். நிச்சயமாக நான் இந்தியாவில் வந்து உங்களை நேர்காணல் செய்யவிருக்கிறேன். செல்வராகவன் சார் மிக அருமையாக நடித்திருக்கிறீர்கள். படத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்தியா வந்து மோகன்.ஜியை நேரில் பார்க்க வேண்டும். மோகன்.ஜி-க்கு சல்யூட். படம் சூப்பராக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.
Also Read | "ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களா..?".. காரணத்தை உடைத்த கணவர்..! Neeya Naana வைரல் Couple ஜாலி பேட்டி..