மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.
Also Read | புதிய லேட்டஸ்ட் ஃபேஷனில் அசத்திய சமந்தா.. தீயாய் பரவும் PHOTOSHOOT ஃபோட்டோஸ்
கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது .
மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .
Also Read | ஐரோப்பா பைக் சவாரி.. பிரிட்டன்ல இருந்து இந்த அழகான நாட்டிற்கு சென்ற அஜித்! வைரல் ஃபோட்டோஸ்