Reliable Software
www.garudavega.com

லாக்டவுனில் பிக்பாஸ் ஷுட்டிங்!!.. சென்னையில் அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களாக நிறைவடைந்திருக்கிறது.

Malayalam BB3 shooting set sealed chennai amid covid lockdown

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி உள்ளிட்டோர் டைட்டில் கார்டுகளை வென்றனர். 

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே, மலையாளத்திலும் தமிழைப்போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனை மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்க வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள ரசிகர்கள் ஏராளமானோர் தீவிர ரசிகர்களாக தினமும் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பிக்பாஸ் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் யாருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதை  அடுத்து வருவாய் அதிகாரிகள் படப்பிடிப்பு குழுவினருடன் பேசி படப்பிடிப்பை நிறுத்தி படப்பிடிப்பு தளத்தை மூடியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் லாக்டவுன் நீடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு நடத்துவது தொடர வேண்டாம் என்பதால் மலையாளம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Malayalam BB3 shooting set sealed chennai amid covid lockdown

அத்துடன் படப்பிடிப்பு தளம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட சம்பவம் சென்னையிலும் சின்னத்திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ALSO READ: "தல அஜித் நடிக்கும் வலிமை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸா?".. ட்ரெண்டிங் தகவல். உண்மை என்ன?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam BB3 shooting set sealed chennai amid covid lockdown

People looking for online information on BiggBossMalayalam3, Coronavirus, Covid19, MalayalamBB3 will find this news story useful.