RRR Others USA
www.garudavega.com

அடிபொலி! சூர்யா - பாலா படத்தில் இணைந்த பிரபல "சூப்பர் சரண்யா" புகழ் மலையாள நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னியாகுமரி: சூர்யா - பாலா படத்தில் பிரபல மலையாள நடிகை இணைந்துள்ளார்.

malayalam actress mamitha baiju on board for suriya bala project

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது  பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

malayalam actress mamitha baiju on board for suriya bala project

'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா      உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

malayalam actress mamitha baiju on board for suriya bala project

டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இவர் சூப்பர் சரண்யா, கோகோ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 2017ல் வேணுகோபாலின் சர்வோபரி பாலக்கரன் படத்தில் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவாவில் (2021) அல்போன்சாவாகவும், கோ கோவில் (2021) அஞ்சுவாகவும், சூப்பர் ஷரண்யாவில் (2022) சோனாவாகவும் நடித்து புகழ் பெற்றார்.

malayalam actress mamitha baiju on board for suriya bala project

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர்  சதீஷ் சூர்யா. இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா... ' மீண்டும் பாலா சாரின் 'ஆக்க்ஷன்'  சப்தத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்' என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam actress mamitha baiju on board for suriya bala project

People looking for online information on Bala, GV Prakash, Krithi Shetty, Mamitha Baiju, Suriya, Suriya 41 will find this news story useful.