பொதுவாக எந்தவொரு விஷயத்துக்கும் வயது என்பது ஒரு தடையாக இருக்காது என பலரும் கூறுவார்கள். காதல், படிப்பு, வேலை என எதை நாம் எடுத்துக் கொண்டாலும் வயது என்ற பாகுபாட்டை நாம் பார்க்கக் கூடாது என பலரும் அறிவுறுத்துவார்கள்.
Also Read | "இத்தனை போராட்டத்துக்கப்புறம்".. அண்ணன் விக்ரமன் பற்றி தங்கை.. "ஒவ்வொரு பாய்ண்ட்டுக்கும் Applause"
இதற்கு உதாரணமாக வயதான காலத்திலும் சிலர் திருமணம் செய்வதையும், வீட்டில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்து இயங்கி வருவதை பற்றியும் நிறைய கேட்டுள்ள நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறி உள்ளது.
மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான "மகேஷிண்டே பிரதிகாரம்" என்னும் திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தவர் லீனா ஆண்டனி. இவருக்கு தற்போது 73 வயதாகிறது. மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை தொடர்ந்து மேலும் சில மலையாள திரைப்படங்களிலும் லீனா நடித்துள்ளார். மேலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்ற பெயரையும் அவர் எடுத்துள்ளார்.
பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் லீனா, கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆவது வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். முன்னதாக தனது சிறு வயதில், 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்த லீனா ஆண்டனி, அதன் பின்னர் குடும்பத்தை வழி நடத்துவதற்காக படிப்பைத் தொடர முடியவில்லை என்ற சூழலும் உருவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 57 வருடங்களுக்கு பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி உள்ளார். அதுவும் அவரது மகன் மற்றும் மருமகள் அறிவுறுத்தலின் பெயரில் தேர்வை எழுதவும் அவர் முடிவு செய்திருந்தார். இதன் முடிவுகள் வெளிவர, அதில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருந்த லீனா, தற்போது மீண்டும் அதனை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதற்கடுத்ததாக, ப்ளஸ் ஒன் படிக்கும் எண்ணத்திலும் லீனா இருப்பதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 73 ஆவது வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அவரை பிரபலங்கள் தொடங்கி பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் bigg boss ஜனனிக்கு குவியும் வாய்ப்புகள்..?!