நடிகை மாளவிகா மோகனன் முதல் முறையாக ஒரு இசை ஆல்பத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also Read | விக்ரம் வேதா இயக்குநர்களின் எழுத்தில் பிரம்மிப்பூட்டும் சுழல் வெப் சீரிஸ்.!
மாளவிகா மோகனன்…
பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார். ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்களிடம் தொடர்ந்து இணைப்பில் இருந்துவரும் மாளவிகா அடிக்கடி ரசிகர்களோடு உரையாடலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இசை வீடியோ அப்டேட்…
பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழி ரசிகர்களுக்கு அறிமுகமான மாளவிகா மோகனன் தற்போது முதல்முறையாக ஒரு இசை வீடியோவில் நடித்துள்ளார். பிரபல ராப் இசைக் கலைஞரான பாட்ஷாவின் இசையில் ’TAUBA’ என்ற இந்த இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தில் மற்றொரு பிரபலமான பாடகர் பாயல் தேவ்வும் இணைந்துள்ளார். வீடியோ பற்றிய அறிவிப்பை வெளியிட்ட மாளவிகா மோகனன் விரைவில் இந்த ஆல்பம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.
Also Read | சிவாங்கியோடு சேர்ந்து மேடையில் கலக்கிய CWC புகழ்… இவ்ளோ நல்லா பாடுவாரா?.... viral வீடியோ