www.garudavega.com

"டெய்லி காலைல சாப்பிட்ற உணவு இவை தான்".. நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த சமையல் குறிப்புகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

Also Read | G.V. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல மலையாள நடிகை! ஷூட்டிங் அப்டேட்

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்  தனது காலை உணவு குறித்த குறிப்புகளை வழங்கி உள்ளார்.  மாளவிகா மோகனன் தனது பதிவில்,  "நான் ஆரோக்கியமாக சாப்பிடும்போது காலை உணவாக கீழ் உள்ளவற்றை சாப்பிடுகிறேன்.

காய்கறி ஜூஸ்

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

(பொதுவாக 2-3 வெவ்வேறு வண்ண காய்கறிகள்/எப்போதாவது ஒரு பழம்.  தற்போது பீட்ரூட், செலரி மற்றும் ஆப்பிள்).

ஒரு பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று எனக்குத் தெரியும்,  இந்த பழச்சாறுகள்  வைட்டமின் நிறைந்த பானமாக இருக்கும். நான் மிகவும் வேலையான நாளைக் கொண்டிருப்பதால் பலவற்றைச் சாப்பிட அதிக நேரம் இல்லை.

யோகர்ட் & முசெலி

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

(எனது தனிப்பட்ட விருப்பம் எப்போதும் கிரானோலா தான் என்றாலும் நான் தற்போது brown salt bakery rose & pistachio granola ஐ விரும்பி வருகிறேன்.

நான் அதை தயிருடன் காலை உணவாகவோ அல்லது மாலையில் சிற்றுண்டியாகவோ ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருந்தால் சாப்பிடுவேன்.

ஆரோக்கியமான சிற்றுண்டி எதுவும் கிடைக்காத இடத்தில், farmers cafe mumbai-யில் கிடைக்கும் சாக்லேட் கிரானோலாவும் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நல்லது!)

முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட் உடன் நிறைய காய்கறிகள் தான் காலை புரதம்!

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

(நான் காய்கறிகளை சாப்பிடுவதை வெறுக்கிறேன், நான் உருளைக்கிழங்கை மட்டுமே விரும்புகிறேன்,

உண்மையில் உருளைக்கிழங்கு  நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்களுக்காக காய்கறி உண்ணும் நோக்கத்திற்கு உதவாது.

எனவே முட்டை அல்லது கட்லெட் அல்லது குழம்புகளுடன்  என்னால் முடிந்தவரை காய்கறிகளை கலக்க முயற்சிக்கிறேன். (நான் காய்கறிகளை சாலட் வடிவத்தில் சாப்பிட வேண்டியதில்லை)

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

சரி இப்போ வேலைக்கு போகணும். இதோ உங்களுக்காக ஒரு செம்பருத்தி பூ" என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

Also Read | "நான் தான்பா PRODUCER"... Love Today பட Public Review-வில் அர்ச்சனா கல்பாத்தி! வைரல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Shared Her Breakfast Food menu

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Breakfast Food menu will find this news story useful.