என்னது 'மாஸ்டர்'ல தளபதி விஜய்க்கு ஜோடி மாளவிகா மோகனன் இல்லயா ? அப்போ இந்த படத்துல தளபதி.....

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு இன்னும் சிறிது நேரங்களில் துவங்கவிருக்கிறது. விழாவில் தளபதி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இந்த படத்தில் இருந்து விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்திருக்கும் போஸ்டர் வெளியாகி வேற லெவல் டிரெண்டானது.

மாஸ்டரில் மாளவிகா மோகனன் தளபதி விஜய்க்கு ஜோடி இல்லையாம் | Malavika Mohanan is not a pair for Thalapathy vijay in Lokesh Kanagaraj, Vijay Sethupathi's M

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய் சிங்கிளாம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி கிடையாதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்திலும் நடிகர் கார்த்திக்கும் ஜோடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 15)  மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் 'கண்ண பாத்தாக்கா' என்ற பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், பொலக்கட்டும் பற பற என்ற பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டரில் மாளவிகா மோகனன் தளபதி விஜய்க்கு ஜோடி இல்லையாம் | Malavika Mohanan is not a pair for Thalapathy vijay in Lokesh Kanagaraj, Vijay Sethupathi's M

People looking for online information on Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.