மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த நாயகி மாளவிகா மோகனன்.
பேட்ட படத்தில் அறிமுகமானாலும் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் மாளவிகா மோகனன் தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்றார். அடுத்து தமிழில் என்ன படம் நடிப்பார் என பலரும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
முன்னதாக விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்க, நாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதனை அடுத்து தனுஷூடன் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இண்டர்நெட்டை பிரேக் செய்யும் வகையில் அவரது புதிய போடோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு உருகி உருகி கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’என்கிற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: "இஷ்டமானு".. South-ல தான் இவ்ளோ அன்பு.. பட விழாவில் கொஞ்சி பேசிய சன்னி லியோன்!