மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் சர்காரு வாரிபட்டா திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சர்காரு வாரிபட்டா…
மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபட்டா படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் 12 ஆம் தேதியில் ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸடர் மற்றும் டீசர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் மகேஷ் பாபு கூட்டணியில் ஏற்கனவே உருவான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கவனம் ஈர்த்த டிரைலர்…
பரசுராம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த சர்க்காரு வாரி பட்டாவின் திரையரங்க டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மகேஷ் பாபு கையில் சாவியை ஏந்தியபடியும், மக்களுக்கு விரிவுரை வழங்குவதும், பணத்தின் மதிப்பை உணர்த்துவதுமாக டிரெய்லர் தொடங்குகிறது. தொடர்ச்சியான அதிரடி சண்டைகளுக்கு பிறகு, கதை ஒரு வெளிநாட்டு இடத்திற்கு மாறுகிறது, அங்கு அவர் அழகான பெண்ணான கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். அவர் அவளுடன் ஊர்சுற்றத் தொடங்குகிறார். இப்படி காதல், ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த டிரைலர் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது.
முதல்முறையாக டிவிட்டர் எமோஜி…
மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட குழு ட்விட்டர் ஈமோஜியை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தெலுங்கு சினிமாவில் ஒரு பிராந்திய திரைப்படத்திற்காக முதன்முதலில் கிடைத்த பெருமையாகும். நேற்று, சர்க்காரு வாரி பட்டாவின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். அதன் படி இப்போது சர்க்காரு வாரி பாடாவின் ட்விட்டர் ஈமோஜியை வெளியிட்டுள்ளன. முன்னதாக, கேஜிஎஃப் 2, சாஹோ போன்ற பான் இந்தியன் படங்கள் மற்றும் அனைத்து பல மொழிப் படங்களுக்கும் மட்டுமே ஈமோஜி இருந்தது.
இது மகேஷ் பாபு ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈமோஜியுடன் கூடிய ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்தி திரைப்படத் தலைப்பைப் பயன்படுத்தும் ரசிகர்கள் மற்றும் திரைப்படப் பிரியர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8