நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Also Read | துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.. வைரலாகும் BTS போட்டோ..!
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது அவருக்கு CPR செய்ததாகவும், அவர் ICU -வில் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இருதய நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள் கிருஷ்ணாவின் உடல் நிலையை கவனித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்று (நவம்பர் 14) அதிகாலை 1.15 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திரு.கிருஷ்ணா மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டார். 20 நிமிடங்களுக்கு அவருக்கு CPR செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை க்ரிட்டிக்கலாக உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
79 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். இதற்கிடையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கிருஷ்ணா விரைவில் குணமடைய சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | நடிகர் கார்த்தியின் Facebook Page... கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!