மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர்.
கல்லூரி பேராசிரியராகவும் சிறுவர் சீர்திருத்த ஜெயில் ஆசிரியராகவும் அடங்காதவர்களை அடித்தும் வளராத சிறுவர்களை அன்பாலும் திருத்தும் ஒரு மனிதனாக விஜய் நடித்த படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு நிகரான கதாபாத்திரத்தில் தோன்றி வில்லனாக மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. சிறுவயது முதலேயே தவறான போக்கில் வளரும் பவானி என்கிற கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம்.
இந்தப் படத்தில் அந்த பவானி கதாபாத்திரம் சிறிய வயதில் நிறைய வலிகளை தாங்கி தாங்கி பிற்காலத்தில் தவறு செய்யும் கதாபாத்திரமாக உருமாறுகிறது. விஜய் சேதுபதியின் இளைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் இளம் பவானியாக இந்த படத்தில் நடித்திருந்தாலும் பாலகனாக நாட்டாமை உள்ளிட்ட பழைய படங்களில் தோன்றியிருக்கிறார். அதனால்தான் இவர் பெயர் மாஸ்டர் மகேந்திரன்.
இப்போது மாஸ்டர் திரைப்படத்தில் இவர் நடித்திருப்பதால் மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயருக்கு நியாயம் சேர்க்கப்பட்டு விட்டது. இதில் மகேந்திரனுக்கு விஜய்சேதுபதியின் பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் விஜய்சேதுபதியின் உடல் மொழியை உள்வாங்கி தன்னாலான சிறப்பான நடிப்பை கொடுத்து இருந்தார் மகேந்திரன். இதனிடைடே மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், தளபதி65 படத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மாஸ்டர் மகேந்திரனுக்கு மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கார் ஒன்றினை பரிசாக அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
@Actor_Mahendran is in cloud nine as he got his car key from his #Master Director @Dir_Lokesh@teamaimpr pic.twitter.com/TLeShfGUdD
— Behindwoods (@behindwoods) April 8, 2021
மாஸ்டர் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் என்கிற திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ALSO READ: