இந்த சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் மாஸ் ஒப்பனிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தோழா' படத்தை இயக்கிய வம்பி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்கு படம் 'மகரிஷி'. இந்தப் படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Maharshi is a Telugu action drama film stars Mahesh Babu, Allari Naresh and Pooja Hegde in the lead roles and music is composed by Devi Sri Prasad.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் சுமார் 40 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது. சமீப காலங்களில் தெலுங்குப் படங்கள் சென்னையில் அதிக தியேட்டர்களில் வெளியாவது இந்தப் படத்திலும் தொடர்கிறது. இந்த வாரம் 9 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ள நிலையில் ஒரு தெலுங்குப் படத்திற்கு சென்னையில் இவ்வளவு தியேட்டர்கள் கிடைப்பது ஆச்சரியமாக உள்ளது.

மேலும், 9ம் தேதி அதிகாலை காட்சியாக சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிகிறது. தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே அதிகாலை காட்சிகள் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படத்திற்கு அதிகாலை காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது 'மகரிஷி' படத்திற்கும் அதிகாலை காட்சி நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள மகேஷ்பாபு ரசிகர்கள், அன்றைய தினம் பல்வேறு கொண்டாட்டங்களை வைத்துள்ளார்களாம்.

Maharshi is a Telugu action drama film stars Mahesh Babu, Allari Naresh and Pooja Hegde in the lead roles and music is composed by Devi Sri Prasad.

People looking for online information on Devi sri prasad, Mahesh BabuMaharshi, Vamsi will find this news story useful.