தமிழ் திரையுலகில் பிரபல வசனகர்த்தாகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் கிரேஸி மோகன். 'மைக்கேல் மதன காமராஜன்', 'அபூர்வ சகோதரர்கள்' 'அவ்வை சண்முகி' , 'பஞ்ச தந்திரம்' போன்ற படங்களில் இவரது காமெடி வசனங்கள் மிகப்பிரபலம்.
இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 10 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் நேரில் வந்து தங்கள் இறுதி அஞ்சலியை கிரேஸி மோகனுக்கு செலுத்தினர்.
இந்நிலையில் கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி, ''நாங்கள் மிக வருத்தத்தில் இருக்கிறோம். காரணம அவர் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ சாகல. அவரது மரணம் திடீரென நிகழ்ந்தது.
9 மணிக்கு சமீபமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். நான் உடனே அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு மருத்துவர்கள் முடிந்தவரை மருத்துவம் பார்த்தார்கள். கடுமையான மாரடைப்பால் அவர் இறந்தார்.
நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னெவென்றால், 'அவர் வியாதி வந்து இறந்தார், அவருக்கு சுகர் இருந்தது, அவருக்கு BP இருந்தது. அவர சரியா கவனிக்கல, என்ற பொய்யான செய்திகள் பரவின. தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை யாரும் பரப்பாதீர்கள். எல்லாமே பொய்யான செய்திகள். இது தனிப்பட்ட முறையில் என்னுடைய வேண்டுகோள்'' என்று தெரிவித்தார்.