யோகி பாபுவுக்கு மாதவன் சொன்ன வாழ்த்து ! படக்குழுவுக்கு பெரிய சல்யூட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பன்னிகுட்டி. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சி நேற்று வெளியானது.

madhavan praises yogi babu for pannikutty trailer

ஒரு பன்னிகுட்டியையும் அந்த ஊரில் வசிக்கும் சில கதாபாத்திரங்களையும் சார்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் காட்சி அமைந்திருந்தது. யோகி பாபுவுடன் சேர்த்து, விஜய் டிவி ராமர், சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, தங்கதுரை என  காமெடி நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கதிர் நடிப்பில் உருவான கிருமி படத்தை இயக்கிய அனுசரன் இப்படத்தை இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பன்னிகுட்டி படத்தின் ட்ரெய்லர் காட்சியை பார்த்துவிட்டு, நடிகர் மாதவன் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்த தன் ட்விட்டர் பதிவில், யோகி பாபுவின் பன்னிகுட்டி  ட்ரெய்லர் பிரமாதமாக இருந்தாக பதிவிட்டுள்ளார். மேலும், இது போன்ற சிறிய படங்களை தயாரிக்கும் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ்க்கும், அதன் நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.  மாதவனின் இந்த வாழ்த்தால், படக்குழு மேலும் உற்சாகமடைந்துள்ளது.

யோகி பாபுவுக்கு மாதவன் சொன்ன வாழ்த்து ! படக்குழுவுக்கு பெரிய சல்யூட். வீடியோ

Entertainment sub editor

Madhavan praises yogi babu for pannikutty trailer

People looking for online information on Anucharan, K.Karunakaran, Kirumi, Madha, Madhavan, Panni kutty, Yogi Babu will find this news story useful.