Fakir Others Banner USA

சூர்யாவும் ஷாருக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மாதவன் படம் குறித்து புதிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

Madhavan and Simaran's Rocketry The Nambi Effect wrapped

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாதவனின் மனைவியாக சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், ஹிந்தி வெர்ஷனில் ஷாரூக் கானும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கின்றனராம்.

இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'இந்த படப்படிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அதி சிறப்பான படக்குழு மற்றும் என் வாழ்வின் சிறப்பான படப்பிடிப்பு தருணங்கள். பல்வேறு கலவையான மன நிலையில் இருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன் என்று நம்பிக்கை இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan and Simaran's Rocketry The Nambi Effect wrapped

People looking for online information on Madhavan, Sam CS, Simran will find this news story useful.