புகழ்பெற்ற பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து அவர்களின் மகனும், முன்னணி பாடலாசிரியருமானவர் மதன் கார்கி. இவர் எந்திரன், துப்பாக்கி, நண்பன், வேதாளம் உட்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர், தனது தந்தை பற்றி கூறியதாக சொல்லி செய்தி ஒன்று வெளியானது. ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை என்று மதன் கார்க்கி தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்பொழுது "சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, நான் எனது தந்தை பற்றி ஒருவரிடம் தவறாக கூறியதாக வெளியிட்டுள்ளது. அதில் உண்மை இல்லை. எந்த மகனும் அப்படி செய்ய மாட்டான். என்னை பற்றி அறிந்தவர்களுக்கும், என்னுடன் வேலை செய்தவர்களுக்கும், நான் யாரைப் பற்றியும் எந்த சூழ்நிலையிலும் தவறாக பேசுவது இல்லை என்பது தெரியும்" என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
A recent article quotes that I spoke ill about my father to a person. It is not true. No son will do it. Those who know me and have worked with me will know that I have never talked ill about anyone at any point of time.
— Madhan Karky (@madhankarky) June 7, 2020