தமிழக மக்களிடையே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழடைந்தவர் கோவை குணா. ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
Also Read | "கெட்ட பழக்கம் அளவா இருக்கணும்" - ‘அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை குணா மரணம்..! நடிகர் மதன் பாப் வேதனை பேட்டி
இதனை தொடர்ந்து குணா ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்திருந்தார். ஸ்டான்ட் அப் காமெடியாக இருந்தாலும் சரி, மிமிக்ரியாக இருந்தாலும் சரி குணா சில வினாடிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவர். கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி பல்லாயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக பெற்றவர். இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் குணா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த கோவை குணா மரணமடைந்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவரும் நகைச்சுவை நடிகருமான நடிகர் மதன் பாப் கோவை குணா பற்றி பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமான நினைவுகளை உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், “கோவை குணா மிகவும் திறமை வாய்ந்தவர். ஆரம்பத்தில் இருந்தே அவரை நன்கு நான் அறிவேன். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய உறவுக்காரர்கள் மீது எனக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு. அதனால் கோவை குணாவிடம் பேசாமல் கூட இருந்தேன். சரியான வழியில் அவர் போயிருந்தால் அவர் இன்னொரு சந்திரபாபுவாக வந்திருப்பார். அவரிடம் அவ்வளவு திறமை இருந்தது. ஒரிஜினலாக பெர்ஃர்பாம் பண்ணுவார், மிமிக்ரி பண்ணுவார், டான்ஸ் ஆடுவார், பாடுவார். அவர் ஆடும் டான்ஸ் மற்றும் சில நகைச்சுவைகள் அத்தனை ஒரிஜினலானது. ஆனால் இந்த கெட்ட பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அவரிடமும் இருந்தது. அது அளவாக இருந்திருக்க வேண்டும், அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!” என்று வேதனையுடன் பேசினார்.
Also Read | போடு.. ‘சிங்கம்’ மாதிரி போலீஸை மாஸா காட்டும் ஒரு படம் பண்ணவிருக்கும் வெற்றிமாறன்..?