பக்கிரியாக தனுஷ் ஆடும் ‘மாயா பஜாரு’ பெப்பி பாடல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் ஃபிரான்ஸில் வெளியான சர்வதேச படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ‘மாயா பஜாரு’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Maaya Bazaaru, Second single from Dhanush's Pakkiri is out now

ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ‘பக்கிரி’ படத்தில் வரும் மாயா பஜாரு என்ற டான்ஸ் நம்பர் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமித் திரிவேதி இசையமையில் உருவாகியுள்ள இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பென்னி தயால் மற்றும் நிக்கிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து தற்போது ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இது தவிர ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பக்கிரியாக தனுஷ் ஆடும் ‘மாயா பஜாரு’ பெப்பி பாடல் இதோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Maaya Bazaaru, Second single from Dhanush's Pakkiri is out now

People looking for online information on Dhanush, Maaya Bazaaru, Pakkiri, The Extraordinary Journey of the Fakir will find this news story useful.