இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி வருபவர்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என ராம் இயக்கிய படங்களில் பெரும்பாலும் யுவன் இசையமைத்துள்ளார். எனவே ராம் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியிலான திரைப்படங்களுக்கான ரசிகர்கள், இவர்களின் காம்போவிலான அடுத்த பட அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர்.
இந்நிலையில் தான் மாநாடு படத் தயாரிப்பாளர், இயக்குநர் ராமின் அடுத்த படத்தை தயாரிக்கிறார். சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்திலான மாநாடு படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனை அடுத்து, ராம் இயக்கத்தில் தமது 7வது படத்தை V House Productions சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், ராமின் ஆதர்ச இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
#VHouseProductions#ProductionNo7 wl b directed By #DirectorRam starring by@NivinOfficial @thisisysr@yoursanjali @sooriofficial
Pro: @johnmediamanagr pic.twitter.com/hoBthXSMEM
— sureshkamatchi (@sureshkamatchi) August 3, 2021
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுரேஷ் காமாட்சி, "தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்" என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ராம், மம்மூட்டி நடிப்பில் பேரன்பு திரைப்படத்தை முன்னதாக இயக்கியிருந்தார். இப்படி மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியை வைத்து படம் கொடுத்த ராம், மீண்டும் மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்துவரும் நிவின் பாலியுடன் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.