இயக்குநர் ராம் தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள் தனக்கே உரிய நையாண்டி திரைமொழி என நுணுக்கமான மற்றும் உருக்கமான திரைக்கதைகளை படமாக்குபவர் இயக்குநர் ராம்.
இவரது இயக்கத்தில் கடைசியாக மம்மூட்டி நடித்த பேரன்பு திரைப்படம் வெளியானது. இந்நிலையில் ராம், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைகிறார்.
நேரம் எனும் தமிழ்ப்படம் மற்றும் பிரேமம் என்கிற ஹிட் அடித்த மலையாள படம் உள்ளிட்ட திரைப்படங்களால் பிரபலமான நிவின் பாலி தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான்.
இவரது நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தை இயக்கியவர் சுரேஷ் காமாட்சி.
‘மிக மிக அவசரம்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் காமாட்சி தற்போது ராம் இயக்கும் இந்த புதிய படத்தை தமது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நாளை தொடங்குகிறது.