இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவற்றில் 'சென்னை - 28', 'சரோஜா', 'மங்காத்தா' படங்கள் முக்கியமானவை.
தற்போது இவர் சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்கி முடித்து படத்தின் பின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் அறிமுகத் திரைப்படமான சென்னை - 600028 படத்தில் எடிட்டராக அறிமுகமானவர், இவரின் 50வது திரைப்படமும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வந்த "மாசு என்கிற மாசிலாமணி" படம் தான்.
100 வது படமும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள மாநாடு படம் தான்.
இந்த தகவலை வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக #PKL100 என பதிவிட்டு அறிவித்துள்ளார்.
We started our careers together! And still strong together!! So proud and happy to announce #maanaadu is @Cinemainmygenes ‘s 100th film!! #Chennai600028 was his 1st #Masss was his 50th
And now #maanaadu is his 100th!Looking forward for more collaborations! God bless #pkl100 pic.twitter.com/7gLdkZtql6
— venkat prabhu (@vp_offl) July 21, 2021
தமிழ்சினிமாவின் தலைச்சிறந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளருமான பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி படத்தொகுப்பாளராக 'கதை நேரம்' தொடரில் பணியாற்றிய பெருமை கொண்டவர் பிரவீன் K.L.
'சரோஜா' படத்திற்காக தமிழக அரசின் சிறந்த படத்தொகுப்பாளர் விருதையும், 'ஆரண்யகாண்டம்' படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றவர் பிரவின்.K.L.
இவர் வித்தியாசமான திரைப்பட வகைமைகளுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
அவற்றில் சென்னை - 28 (Sports Drama), சரோஜா (Thriller), மங்காத்தா (Action Thriller), ஆரண்ய காண்டம் (Neo- Noir), அரவான் (Historical Epic Drama), காவியத்தலைவன் (Period Drama), கலகலப்பு (Comedy), என்றென்றும் புன்னகை (Romedy), மெட்ராஸ் (Political Drama), மாசு என்கிற மாசிலாமணி (Super Natural Horror), கொம்பன் (Action Drama), மருது (Action Drama) போன்ற படங்கள் முக்கியமானவை.