இயக்குனர் பாரதிராஜாவை மருத்துவமனையில் சென்று சந்தித்த பின் பாடலாசிரியர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
Also Read | பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் 'கோல்டு'.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
தமிழ் சினிமாவின் திசைவழிப் போக்கை மாற்றிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாரதிராஜா. 'இயக்குனர் இமயம்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோரை வைத்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களை இயக்கியவர்.
சமீப காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வரும் பாரதிராஜா, இளம் இயக்குனர்கள் இயக்கிய பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, கென்னடி கிளப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக 'சீனியர் திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பாரதிராஜா, கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து, நமது Behindwoods தரப்பில் விசாரித்த போது, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி, டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக நேற்று மதியம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளையும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில் இயக்குனர் பாரதிராஜாவை பாடலாசிரியர் வைரமுத்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், "மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார்" என பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்
நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை
சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்
அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்
— வைரமுத்து (@Vairamuthu) August 24, 2022
Also Read | A.R. ரஹ்மான் ஸ்டுடியோவில் மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட்! இதான்