பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ''அவர்கள் நம்மை பிரிக்கிறார்கள். சிஸ்டம் மீதான நம்பிக்கை மெதுவாக குறைந்து வருகிறது. மதச்சார்பற்ற எண்ணம் உறுதியானது. தொடர்ந்து உறுதியாக செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, 'இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...?' என்று தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.