பாடலாசிரியர் வைரமுத்து தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
Also Read | 45 நாட்கள்.. மொட்டை போட்டு நடித்த பிரபுதேவா - "மை டியர் பூதம்" இயக்குனர்!
மேலும் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கோயமுத்தூரில் உள்ள வைரமுத்துவின் இலக்கிய ரசிகர்கள் அவருக்கு விழா எடுக்கின்றனர்.
"வைரமுத்து இலக்கியம் 50" என்ற நிகழ்ச்சி வைரமுத்து முன்னிலையில் கோயம்புத்தூர் காளப்பட்டி சுகுணா கலையரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது.
இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோயமுத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாடலாசிரியர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.
குறிப்பாக வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நாவலை படமாக்கினால் கதாநாயகனாக (பேயத்தேவர்) ரஜினிகாந்த் நடிக்க பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த கதையில் நடிப்பதால் ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. ஆனால் எதிர்பாராத பல விருதுகள் ரஜினிக்கு கிடைக்கும் என்று வைரமுத்து கூறினார்.
வைகை அணை கட்டப்பட்ட போது அதற்காக அரசாங்கத்தால் காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் கதை தான் கள்ளிக்காட்டு இதிகாசம். 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். சாகித்திய அகாதமி விருது வென்ற நாவல் என்பதால் 23 மொழிகளில் இந்திய அரசால் இந்நூல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேயத்தேவர், மொக்கராசு, செல்லத்தாயி, மின்னல், அழகம்மா, சின்னு ஆகிய கதாபாத்திரங்கள் இந்நாவலில் புகழ்பெற்றவை.
Also Read | 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் "அரபிக்குத்து" டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே! சும்மா தீ ஆட்டம் இது.