இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்ரு வைரலானது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக், ஜெகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் சம்மந்தமாக சமூக வலைதளங்களில் போலியான போஸ்டர் ஒன்று வைரலானது. இது குறித்து லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இணையத்தில் வைரலாகும் குறிப்பிட்ட போஸ்டர் போலியானது. தயாரிப்பு நிறுவனத்திற்கோ, இயக்குநருக்கோ, படக்குழுவிற்கோ இதில் எந்த சம்மந்தமும் இல்லை’ என தெரிவித்துள்ளது. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
This poster of #Indian2 circulating online is not an official one!
Neither the production house nor the director & team is involved in this! pic.twitter.com/ebkqS1r8hq
— Lyca Productions (@LycaProductions) December 5, 2019