சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.
இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன.
டான் திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடிந்த நிலையில் படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக ரிலீஸ் தேதி பின்னர் மார்ச் 25 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதே நாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமம் லைகா நிறுவனம் வாங்கியிருந்தது. நாளில் லைகா நிறுவனம் விநியோகிக்கும்ன் ஆர் ஆர் ஆர் திரைப்படமும் தயாரித்துள்ள டான் படமும் ஒரே நாளில் ரிலிஸ் ஆனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் எழலாம் என்று பேசப்பட்டது.
அதையொட்டி ஏதாவது ஒரு படம் மார்ச் 25 ரிலீஸில் இருந்து பின்வாங்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இரண்டு படங்களுமே ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் என்பதால் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம் என சொல்லப்பட்டது.
அதனால் இப்போது அதை உறுதி செய்யும் விதமாக லைகா நிறுவனம் டான் படத்தின் ரிலிஸை மே மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.இது சம்மந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் டான் திரைப்படம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன் மூலமாக ஆர் ஆர் ஆர் திரைப்படத்துக்கு போதுமான திரையரங்குகள் தமிழகத்தில் ஒதுக்கப்படுவதில் எழுந்த சிக்கல் தீர்ந்துள்ளது.