777 Charlie Trailer

சூப்பர்ஸ்டாரின் மெஹா ஹிட் சந்திரமுகி… 2 ஆம் பாகத்தில் லாரன்ஸ் … லைகா வெளியிட்ட மாஸ் UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகம் தற்போது அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lyca announced chandramukhi second part viral poster

Also Read | ஆக்ஷனில் இறங்கிய கோபி… ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்… ’பாக்கியலட்சுமி’ யில் களேபரம்

ஒரிஜினல் சந்திரமுகி…

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான 'மணிசித்ரதாலு' படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கியிருந்தார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு,  நடிகை ஷோபானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பல மாற்றங்கள் செய்து இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் 2004ல் ரீமேக் செய்தார். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Lyca announced chandramukhi second part viral poster

ரீமேக்…

ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2005ம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 890 நாட்கள் ஓடி இந்தப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியுடன், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார். ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றின.

Lyca announced chandramukhi second part viral poster

இரண்டாம் பாகம்…

இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்தார். ஆனால் இப்போது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Lyca announced chandramukhi second part viral poster

முன்னணிக் கலைஞர்கள்..

முதல் பாகத்தில் நடித்த படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க, இசையமைப்பாளராக பாகுபலி மற்றும் RRR படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளராக RD ராஜசேகர் ஒப்பந்தமாக, கலை இயக்குனராக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | “oops”… விக்ரம் வேதா ஷூட் Over… புது Getup-க்கு மாறிய ஹ்ரித்திக் ரோஷன் … Viral pic

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lyca announced chandramukhi second part viral poster

People looking for online information on Chandramukhi, Chandramukhi second part, Lyca, Raghava Lawrence, Rajinikanth will find this news story useful.