சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நட்டி என்ற நட்ராஜ். இவர் பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர். ஹிந்தி இயக்குநர் சுஜீத் சிர்கார் சமீபத்தில் நட்டியை பற்றி பெருமையாக பதிவிட்டுள்ளார்.
நட்டியும் ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே சமயத்தில் திரை உலகில் அறிமுகமானார்கள். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான 'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்கு நட்டிதான் ஒளிப்பதிவாளர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக படங்களில் வேலை செய்யவில்லை.
நட்டி பல பிரபல இயக்குனர்களுடன் கைகோர்த்து பெரும் வெற்றிகளை குவித்து வந்தார். அந்த சமயத்தில்தான் தமிழில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் நடிகராகவும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஷூஜித் சிர்கார் தனது ட்விட்டரில் நட்டியைப் பற்றி கூறியது, "எங்களுடைய போராட்டமான காலகட்டங்களில் நட்டிக்கும் முக்கிய பங்கிருக்கிறது. நானும் நட்டி என்ற நட்ராஜும் ஒரே சமயத்தில், ஒன்றாகத்தான் எங்கள் சினிமா பயணத்தைத் தொடங்கினோம். லுங்கி டான்ஸை உண்மையில் கண்டுபிடித்தது நட்டிதான்" என்று பதிவிட்டுள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் ஹிந்தித் திரையுலகில் மட்டுமில்லாமல் தமிழிலும் சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது இந்த. லுங்கி டான்ஸை உருவாக்கியவர் நட்டிதான் என்று சுஜீத் சிர்கார் கூறியிருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது
Natty has played a very important role in our struggles..@natty_nataraj and me started our cinema journey together.. lungi dance was actually invented by Natty:)))) @anuragkashyap72 https://t.co/ic9musRxIN
— Shoojit Sircar (@ShoojitSircar) June 7, 2020