மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது. இந்த படத்தில் மோகன்லால் உடன் விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர்
தற்போது லூசிபர் திரைப்படம் சிரஞ்சீவி - நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. வேலைக்காரன், தனி ஒருவன் படங்களின் இயக்குனர் "ஜெயம்" மோகன்ராஜா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (21.08.2021) மாலை 5.04 மணி அளவில் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது.
அதன்படி படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு "காட்பாதர்" என பெயரிடப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு வெளியான மரியோ புஸோவின் எழுத்தில், பிரான்சிஸ் போர்டு கொப்போலோவின் இயக்கத்தில் மூன்று பாகங்களாக வெளியான உலக சினிமாவில் தவிர்க்கவே முடியாத 'காட்பாதர்' படத்தினை நினைவுபடுத்தும் விதமாக இந்த டைட்டில் அமைந்துள்ளது.
Presenting the Supreme Reveal of Megastar @KChiruTweets in a never seen before avatar as #GodFather🔥@jayam_mohanraja @AlwaysRamCharan #RBChoudary @ProducerNVP @KonidelaPro @SuperGoodFilms_ @MusicThaman @sureshsrajan#Chiru153 #HBDMegaStarChiranjeevi pic.twitter.com/e9BYCwQz7b
— Konidela Pro Company (@KonidelaPro) August 21, 2021