பிக்பாஸ் வீட்டில் பாவனியிடம் அமீர் பேசிய விஷயங்கள் வைரலாகியுள்ளன.
அப்படி பேசும்போது, “நான் சொன்னதுக்கு டக்குனு ஓகே சொன்னா, கிக் இருக்காது மேடம்.. இன்னும் 25 நாள் இருக்கு என சொல்லிவிட்டு, பின்னர் தில் இருந்தா அல்லது தம் இருந்தா சொல்லுனு நீங்கதானே சொன்னீங்க.? நான் சொன்னதும் டூயட் பாடிட்டு வர வேண்டிதானே?” என்று கேட்டுவிட்டார். மேலும், “”
பின்னர் அமீர், பிரியங்காவிடம் வந்து, “தில் இருந்தா சொல்லுனு சொன்னா நான் சொல்லிவிட்டேன் அவ இப்ப ஷாக்ல இருக்கா.. நீ போய் சமாதானப் படுத்து அக்கா” என்று கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட பிரியங்கா, “நிஜமாவா சொல்ற? உனக்கு அவள நிஜமா பிடிச்சுருக்கா? நீ சும்மாலாம் சொல்லல இல்லையா? இது எப்போல இருந்துப்பா? அவ யெஸ் சொல்றா.. நோ சொல்றானு கவல இல்ல. உனக்கு புடிச்சிருக்கு அவள.. சரி என்ன பண்லாம்? என்னது லவ்வா? அய்யோ பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரு காதல் கதையா? அதுவும் எனக்கு பிடிச்ச 2 பேருக்கும் இடையில நடக்குதே? பிக்பாஸ்..” என பிரியங்கா கூறினார்.
அந்த நேரத்தில் பாவனி வர, “இப்ப அவ வெக்கப்பட்டு கிட்டே வருவா பாருங்க.. இதுக்கு முன்னாடி அவ இப்படி வெக்கப்பட்டு பாத்துருக்கீங்களா?” என பிரியங்காவிடம் அமீர் சொல்ல, அதற்கு பாவனி, “நான் சாதாரணமாகவே சிரிப்பேன். நான் ஷை டைப். நான் அவ்ளோ க்யூட்டானு கேட்டா நோ என்கிறான். இவன் சீரியஸா சொல்றானா? எனக்கு சிரிப்புதான் வருது” என்று சொன்ன பாவனி, அமீரை பார்த்து, “கேக்கும்போது நல்லாருக்கு. ஆனா நீ என்ன பண்றனு உனக்கு தெரியுதாடா? தம் இருந்தா .. தில் இருந்தா சொல்லுனு சொன்னேன். அதுக்காக எனக்கு என்ன தெரியும்.. அவன் இப்படி சொல்லுவானு.. இந்த வாரம் நான் வெளிய போயிடுவேனு தோணுது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
அதற்கு அமீர், “நானும் வர்றேன் மேடம்” என்று சொல்ல, 2 பேரும் போங்க என பிரியங்கா கூறுகிறார். இப்படியாக இவர்களின் பேச்சுகள் தொடர்ந்தன.