பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களுள் ஒருவர் நடிகர் ராஜூ ஜெயமோகன் என்று அறியப்படும் ராஜூ.
இயக்குநர் பாக்யராஜிடம் பணிபுரிந்த இவர், விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர். தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 வது சீசனில் ராஜு ஒரு முக்கியமான போட்டியாளராக இருக்கிறார்.
மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லும் ராஜூ இணையவாசிகளின் மத்தியில் ஜென்டில்மேன் என்று பெயர் வாங்கியிருக்கிறார். பிக்பாஸ் தொடங்கிய இரண்டாவது நாள் முதலே #RajuGentleman என்கிற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருவதை நாம் காணமுடிகிறது.
அந்த அளவுக்கு நேரடியாக முகஸ்துதி இன்றி பேசக்கூடியவராகவும், அவ்வப்போது கலகலப்பாகவும் பேசக் கூடியவராகவும் ரசிகர்கள் கூறி வருகின்றர். அண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் ராஜூவை மையப்படுத்தி நடந்தன. பாத்ரூம் பிரிவுக்கு தான் கேப்டனாக இருப்பதாகக் கூறியது, சின்ன பொண்ணுவின் கதை சொன்ன விதத்தை டிஸ்லைக் செய்து அதற்கு ராஜூ சொன்ன காரணம் என ராஜூ கவனம் ஈர்த்துள்ளார்.
தாமரைச்செல்வி அருகில் அமர்ந்து கதை சொல்லி பயமுறுத்தி அலற வைத்த ராஜூ, சின்ன பொண்ணுவின் கதை சொன்ன விதத்தை டிஸ்லைக் செய்த பின்னர், அவரே சென்று அக்கா என சின்ன பொண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இப்படி இயல்பாக தான் செய்வதை பிக்பாஸ் வீட்டில் செய்து கொண்டிருக்கிறார் ராஜூ என ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் சிலர், சின்ன பொண்ணுவின் கதையை அவர் இப்படி டிஸ்லைக் செய்திருக்க தேவையில்லை என்று விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ராஜூ, முன்னதாக அளித்த பேட்டியின்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில், “நிறைய போட்டியாளர்கள் கோபப்படுவது போல் நடந்து கொள்ளும் விஷயங்களை பார்த்து இருக்கிறோம். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொல் கூறியிருந்த ராஜூ, “நிஜ வாழ்க்கையில் ஒருவர் மீது கோபம் வந்தால் நாம் அந்த இடத்தில் காட்டாமல் வேறு ஒரு இடத்தில் சென்று தான் பேசுவோம். எடுத்தவுடனேயே ஒருவர் மீதான கோபத்தை மனம் திறந்து நேரடியாக காட்ட மாட்டார்கள் யாரும்.
பிக்பாஸில் ஒருவர் மீது கோபம் வந்ததும் அவரை பற்றி நேரடியாக பேசுவதும், அவர்களிடம் கத்துவதும் எனக்கு கொஞ்சம் ஓவராக தெரிகிறது. இப்படி கோபம் வர வாய்ப்பு இல்லை. இவர்கள் ஓவராக பண்ணுகிறார்களோ என்கிற எண்ணம் எனக்கு தோன்றும். உண்மையிலேயே கோபம் வந்தால் அந்த இடத்தில் அமைதியாக இருந்துவிட்டு, தனியாக சென்று ‘அவன் இருக்கானே’ என்றுதான் பேசுவார்கள்.
நேரடியாக, அவர்களிடம் பேசாமல் தனித்தனி இடங்களில் பேசி பேசி அந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதான பிறகும், ஓரிரு முறை அவர்களை சகித்துக்கொண்டு பிறகு கடைசியாக ஓரிடத்தில்தான், நேரடியாக அவர்களிடம் கோபம் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
அதே சமயம் நமக்கு பிக்பாஸ் எடிட் செய்து தான் போடுகிறார்கள். அதனால் அதற்கு இடையில் அவர்களுக்கு நடுவில் நடந்த சந்திப்புகள், சம்பவங்கள் குறித்து நமக்கு தெரிய வருவதில்லை. அதனால் கூட அப்படி தெரிவதற்கு வாய்ப்பு உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த Throwback வீடியோ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீடியோவை இணைப்பில் காணலாம்.