8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் உள்ள Island மைதானத்தில் நடந்துவருகின்றன.
8 ஆவது ஆண்டு விருது…
ஆண்டுதோறும் நடக்கும் 8 ஆவது Behindwoods Gold Medals Award விருது நிகழ்ச்சி இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நிகழ்வாக சென்னை தீவுத்திடலில் உள்ள Island மைதானத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி சுவாரஸ்யமான விறுவிறுப்பாகவும் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பெருமைமிகு படைப்புகளை அளித்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி பல சுவாரஸ்ய தருணங்களோடு விறுவிறுப்பாக நடந்தது.
விழாவில் லோகேஷ் கனகராஜ்….
இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். நிகழ்வில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட லோகேஷ் ‘தளபதி 67’ படத்தைப் பற்றி கேட்டபோது "இன்னும் கொஞ்ச நாளில் அதிகாரப்பூர்வ அப்டேட் வந்து விடும்" என கூறினார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ந்தனர்.
பின்னர் லோகேஷ் கனகராஜுக்கு சர்ப்ரைஸாக ஒரு புகைப்படம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. அதில் தேவர்மகன் படத்தில் கமலும் சிவாஜியும் இருக்கும் புகைப்படத்தை மாற்றி கமலும் லோகேஷும் இருப்பது போல உருவாக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து சர்ப்ரைஸ் ஆன லோகேஷ் “ரொம்ப நன்றி. இத நான் எதிர்பார்க்கவே இல்ல. இந்த போட்டோவ என்னோட ஆஃபீஸ்ல முன்னாடி மாட்டி வச்சுடுவேன். இதப் போலவே ஒரு போட்டோ விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்தோம். படம் ரிலீஸானதும் முதல்ல அததான் நான் ஷேர் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா நீங்க அத மாதிரியே ஒரு போட்டோவ கொடுத்திருக்கீங்க” என பேசினார்.