வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
இந்த படத்தில் நடிக்கின்றனர்.
லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.
லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.
லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்தது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் நடந்த பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "லியோ படம் LCU என்ற லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் உள் வருமா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "படம் அக்டோபர் மாதம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே அடுத்தடுத்த மாதங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும்" என கூறியுள்ளார்.