www.garudavega.com

''மாஸ்டர்' ரிலீஸிற்கு பிறகு...'' - கமல்ஹாசன் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகியது.

கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், 'மாஸ்டர்' திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தரப்பு உறுதிபட தெரிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூரில் தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் தியேட்டரில் தான் வெளியாகும். படம் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்வார்கள். தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று நம்பிக்கை இருக்கிறது.  கமல்ஹாசனுடன் நான் இணையும் படத்தின் பணிகள் துவங்கியிருக்கிறேன். மாஸ்டர் ரிலீஸிற்கு பிறகு அது குறித்து தெரிவிக்கிறேன் என்றார்.

''மாஸ்டர்' ரிலீஸிற்கு பிறகு...'' - கமல்ஹாசன் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj speaks about Thalapathy Vijay and Vijay Sethupathi's Master and Kamal Haasan | மாஸ்டர் மற்றும் கமல்ஹாசன் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் தக

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.