மாநகரம், கைதி படங்களுக்கு பிறகு விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் திரைக்கதை லிஜண்ட் பாக்யராஜ் அவர்கள் லோகேஷ் கனகராஜை பிரத்தியேகமாக எடுத்த பேட்டியில் லோகேஷ் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
வெற்றிமாறன், மணிரத்னம் (பொன்னியின் செல்வன்) போல் நாவல்களை எடுக்கும் யோசனை இருக்கிறதா? என பாக்யராஜ் கேட்டதற்கு, நெருக்கமான வட்டத்தில் இருக்கும் எழுத்தாளர்களுடன் ஆலோசனை போகிறது. ஆனால் முதலில் எழுதிவைத்த கதைகளை முதலில் முடிக்கலாம் என்று யோசனை என்று லோகேஷ் பதில் அளித்தார்.
ஓ அவ்வளவு கதைகளை எழுதி வெச்சுருக்கீங்களா? என பாக்யராஜ் கேட்கிறார். அவ்வளோ ஒன்னும் பெருசா இல்ல சார் (சிரிக்கிறார்) என லோகேஷ் குறிப்பிட்டார். கமலுக்கான ‘விக்ரம்’ கதையைப் பொருத்தவரை ரிசர்ச்சுக்கான விஷயங்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. அவருக்கு படம் பண்ணுவதை பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். 2 மாதமாக முதலில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் பெரும்பாலும் செய்துவிட்டார் என்கிற கருத்து உள்ளது. இந்த மாத முடிவில் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் முடிவு செய்யப்பட்டுவிடுவார்கள்.
“ஒரு நற்பெயர் வர வர, பெரும் நட்சத்திரங்களை நோக்கியே படம் பண்ணலாம் என்று ஐடியா இருக்கிறதா? ஸ்கிரிப்டை வலுவாக அமைத்து, அதை நம்பி படம் பண்ணும் உங்களுக்கு நட்சத்திரங்களை வைத்து படம் பண்ணும்போது உங்கள் சிந்தனையை முழுமையாகக் கொண்டுவர முடியாத நெருக்கடி உண்டாகுமே? உங்களைப் போன்றோரால் தான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்?” என பாக்யராஜ் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த, “மாநகரம் போன்ற கதைகளை பெரும் நட்சத்திரங்களை வைத்து பண்ண முடியாது. எனக்கு ஒரு டார்க் ஹியூமர் படம் எடுக்க ஆசை உள்ளது. அந்த மாதிரி நேரங்களில் புதுமுகங்களை வைத்து படம் அமையும்போது பண்ணுவேன்”.
மீண்டும் பாக்யராஜ் பேசும்போது “நாவல்களை வைத்து எடுக்க தமிழ் சினிமாவில் பயம் கொள்கிறார்கள். வெற்றிமாறன் போன்றோர் வெற்றிகரமாக அதை செய்கிறார்கள். உங்களைப் போன்ற நல்ல கலைஞர்கள் தான் அதை செய்ய முடியும். நமக்கும் வெவ்வேறு கதைக்களங்கள் கிடைக்கும்.” என்று குறிப்பிடுகிறார்.
ALSO READ: “அந்த நியூஸ் பேப்பர படி!” .. “நடந்துச்சா?”.. விஷாலின் ‘சக்ரா’.. மிரட்டும் Sneak Peek!