விரைவில் திரைக்கு வரவுள்ள மைக்கேல் திரைப்படம் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர்.
சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும், பான் இந்திய படம் “மைக்கேல்”. பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.
இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்ஷ்மி சரத்குமார், வருண் சந்தீஷ், அனுசிய பரத்வாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்த நிகழ்ச்சியை நம்முடைய Behindwoods சேனல் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைக்கேல் படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, கைதி படம் குறித்து சந்தீப் பேசுகையில்,"மாநகரம் பெரிய வெற்றி கிடைச்சது. அப்போ லோகேஷுக்கு பல இடங்கள்ல இருந்து சான்ஸ் வந்துட்டு இருந்துச்சு. ஆனா அவரு மன்சூர் அலிகானையும் குரு சோமசுந்தரத்தையும் வச்சு படம் பண்ணப்போறேன்னு கைதி-ங்குற கதையோட சுத்திட்டு இருந்தாரு. நான் கேட்டு டென்ஷன் ஆகிட்டேன். அப்புறம் எக்ஸைட்டா இருக்கும்னு நெனச்சேன். கடைசியா கதை கார்த்தி அண்ணா-கிட்ட ஒப்பந்தம் ஆச்சு"
"அப்போது ஹைதராபாத்-ல என் வீட்டுக்கு வந்தாரு. இந்த மாதிரி படம் சைன் பண்ணிருக்கேன். எனக்கு பயமா இருக்குன்னு சொன்னாரு. என்ன ஆச்சுன்னு கேட்டேன். இல்லடா, இவ்வளவு பெரிய படம். முதல் படத்தைவிட பெரிய பட்ஜெட், இதுக்கெல்லாம் நான் எவ்வளவு வேலை பார்க்கணும்னு சொன்னாரு. அது இந்நேரம் வரைக்கும் எனக்கு தோணிட்டே இருக்கும். எந்த படம் ஆரம்பிச்சாலும் நம்மளை நம்பி இந்த படத்தை ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு நம்ம உழைக்கணும். அது நம்ம கடமை-னு நினைப்பேன். அதை அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்" என்றார்.